Tuesday, November 24, 2020

AMIR GROUP OF COMPANY

 Nivar Cyclone Tamil 

click the link to see nivar news in tamil.

 தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டிருக்கிறது. நிவர் என்றால், வருமுன் காப்பது என அர்த்தம். இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே 25-ம் தேதி மாலையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


எனினும் நவம்பர் 24 (செவ்வாய்) முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடற்கரையோர கிழக்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் முன் எச்சரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நிவர் புயல் பாதிப்புகளின்போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்; மக்களைப் பாதுகாப்பது நமது கடமை” என்று அழைப்பு விடுத்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவர் புயல் கரையைக் கடக்கும்போது, அனவிஅரும் வீட்டிற்குள் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். “நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவும்; தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குமாறு அனைத்து காங்கிரஸ் கட்சி ஊழியர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்; வீட்டிற்குள் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை அரசு விடுமுறை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  அத்தியாவசியப் பணியில் ஈடுபடுபவர்கள் மட்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக , 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி. )
நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் .நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம். 
BE SATE AT HOME 
THANK YOU 
BY AMIR GROUP OF COMPANY


No comments:

Post a Comment

   AMIR GROUP OF COMPANY AMIR GROUP OF COMPANY  WISH YOU AND YOUR FAMILY HAPPY PONGAL.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி...